தங்கவயல் தாலுகா பஞ். தேர்தல் வாக்கு எண்ணிக்கை தாமதம்

தங்கவயல். தங்கவயல் தாலுகா பஞ்சாயத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை தங்கவயல் கோரமாண்டல் ஸ்கூல் ஆப் மைன்ஸ் கட்டிடத்தில் நடந்தது. தங்கவயல் தாலுகாவை சேர்ந்த 16 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 27ம் தேதி நடந்தது. அதில் 293 உறுப்பினர்களுக்கான இந்த தேர்தலில் 786 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் போட்டியின்றி 19 வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மொத்தம் உள்ள 88,244 வாக்காளர்களில், 86,150 வாக்குகள் பதிவாகின. இது 86.3 சதவீதமாகும். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து. தேர்தல் முடிவுகளை அறிய ஏராளமானோர் கூடி இருந்தனர். வாக்கு சீட்டு மூலம் வாக்கு பதிவு நடந்ததால் வாக்குகள் எண்ணும் பணி தாமதமானது.

Related Stories: