சிகிச்சைக்காக மும்பை செல்கிறார் அமைச்சர் கோபால் ராய் இலாகா சிசோடியாவுக்கு ஒதுக்கப்பட்டது

புதுடெல்லி: ஆம் ஆத்மி அரசில் நகர்ப்புற மேம்பாடு, பொது நிர்வாகம், சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் வன உயிரியல் துறைகளுக்கு அமைச்சராக கோபால் ராய் பதவி வகிக்கிறார். தண்டுவடம் பாதிப்பு காரணமாக கடந்த சில வாரங்களாக அவர் தீராதவலியால் அவதிப்பட்டு வந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன் அவருக்கு தண்டுவடத்தில் கோளாறு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். எனினும், சமீபகாலமாக அவருக்கு தோள்பட்டை வலி அதிகரித்தது. அதனால் கடமையில் கவனம் செலுத்த முடியாமல் திண்டாடினார். மும்பையில் அதற்கான அதிநவீன ரோபோட்டிக் சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்து அமைச்சர் கோபால் ராய் தற்போது மும்பை சென்றுள்ளார்.

மும்பையில் 20 நாட்கள் தங்கியிருந்து அவர் சிகிச்சை பெற உள்ளார் ராய் வகித்த அனைத்து பொறுப்புகளையும் அவர் திரும்ப வரும் வரை, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூடுதலாக கவனிப்பார் என அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட ஆணையில், ‘‘தேசிய தலைநகர் மண்டல டெல்லி அரசியல் விதிகள் 1993ன் சட்டப்பிரிவு 3ல் (அலுவல்கள் ஒதுக்கீடு) குறிப்பிட்டு உள்ள அதிகாரப்படியும், டெல்லி முதல்வர் பரிந்துரை செய்ததை ஏற்றும், அமைச்சர் கோபால் ராய் வகித்த பொறுப்புகளை துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஒதுக்க ஆளுநர் அனில் பைஜால் சம்மதம் பெறப்பட்டு உள்ளது’’, எனக் கூறப்பட்டு உள்ளது.

Related Stories: