முதல்வர் வேட்பாளர் யார் என எங்கள் முடிவை கூறிவிட்டோம்: பாஜகவுக்கு ஓபிஎஸ் பதில்

னி: முதல்வர் வேட்பாளர் யார் என எங்கள் முடிவை ஏற்கனவே கூறிவிட்டோம் என்று தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில்  நேற்று நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ரஜினி அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறியிருக்கிறாரே? மரியாதைக்குரிய சிறந்த நடிகர் ரஜினிகாந்த்.  அவர் அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருந்தார். அதை வரவேற்றேன். தற்போது உடல் நலம் கருதி அரசியலுக்கு வர மாட்டேன் என கூறியிருக்கிறார். அவர் உடல்நலத்துடன் நீண்ட ஆயுளுடன் நீடூழி வாழ வேண்டும்.

ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பீர்களா? அவர் முதலில் உடல் நலம் பெற்று வரட்டும். பாஜ மேலிட பார்வையாளர் சி.டி.ரவி    சட்டமன்ற தேர்தலுக்கு பின்புதான் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கூற முடியும் என்று கூறுகிறாரே?

ஏற்கனவே எங்கள் முடிவை தெரிவித்து விட்டோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: