எஸ்டோனியா உட்பட 3 நாடுகளில் இந்திய தூதரகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்.!!!

டெல்லி: சென்னை-பெங்களூரு தொழில் பாதை (சிபிஐசி) திட்டத்தின் கீழ் கிருஷ்ணாபட்டணம் மற்றும் துமகுருவில் தொழில் பாதை முனையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய அமைச்சர்கள் அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்ட விவரங்களை தெரிவித்தனர்.

* சென்னை-பெங்களூரு தொழில் பாதை (சிபிஐசி) திட்டத்தின் கீழ் கிருஷ்ணாபட்டணம் மற்றும் துமகுருவில் தொழில் பாதை முனையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

* நொய்டாவில் பன்முக மாதிரி தளவாட மையம் மற்றும் பன்முக மாதிரி போக்குவரத்து மையம் அமைக்கவும் ஒப்புதல்.

* எஸ்டோனியா, பராகுவே மற்றும் டொமினிக் குடியரசு நாடுகளில் இந்திய தூதரகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

* உணவு தானியங்களான (அரிசி, கோதுமை, பார்லி, மக்காச்சோளம் மற்றும் சோளம்), கரும்பு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்றவற்றிலிருந்து, முதல் தலைமுறை எத்தனால் உற்பத்திக்கான வடி திறனை மேம்படுத்துவதற்காக மாற்றியமைக்கப்பட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

* விண்வெளியின் அமைதியான பயன்பாடுகளில் ஒத்துழைப்பு குறித்து இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

* பாரதீப் துறைமுகத்தில், ரூ.3,004.63 கோடி மதிப்பீட்டில் மிகப் பெரிய கப்பல்களை கையாளும் விதத்தில், மேற்கு கப்பல்துறை உள்பட உள் கட்டமைப்பு வசதிகளை பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் ஆழப்படுத்தவும், மேம்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

* ஆகாஷ் ஏவுகணை அமைப்பை ஏற்றுமதி செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

* ஆகாஷின் ஏற்றுமதி பதிப்பு தற்போது இந்திய ஆயுதப்படைகளுடன் பயன்படுத்தப்பட்டுள்ள அமைப்பிலிருந்து வேறுபட்டதாக இருக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்வீட் செய்துள்ளார்.

* இந்தியாவில் 684 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி திறன் உள்ளது. 2019-20 சர்க்கரை ஆண்டில் எங்கள் எத்தனால் கொள்முதல் 38 கோடி லிட்டரிலிருந்து 173 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது.

Related Stories: