குரேஷியாவில் பூகம்பம் கட்டிடங்கள் இடிந்தன: சிறுமி பலி

சக்ரிப்: மத்திய குரேஷியாவில் கடந்த திங்களன்று 5.2 ரிக்டேர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அப்போது, கட்டிடங்கள் இடிந்து பலத்த சேதம் ஏற்பட்டது. அதன் பிறகு, சிறிய நில அதிர்வுகள் தொடர்ந்தன. இந்நிலையில், நேற்று அங்கு 6.3 ரிக்டேர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதனால், வீடுகள் இடிந்து விழுந்தன. வர்த்தக கட்டிடங்கள் சரிந்தன. ஏற்கனவே நில அதிர்வுகள் நீடித்து கொண்டிருந்ததால், மக்கள் உஷார் நிலையில் வீட்டுக்கு செல்லாமல் வெட்டவெளியில் தங்கி இருந்தனர். இதனால், நேற்றைய பூகம்பத்தால் பெரிய அளவில் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. தெற்கு குரேஷியாவின் சக்ரிப் நகரத்துக்கு தென்கிழக்கே 46 கிமீ தொலைவில் பூகம்பத்தின் மையம் இருந்தது. பூகம்பத்தால் இடிந்த கட்டிடத்தில் சிக்கி இறந்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. காருடன் கட்டிட இடிபாட்டில் சிக்கி இருந்த தந்தையும், மகனும் மீட்பு படையால் மீட்கப்பட்டனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

Related Stories: