ராணுவ நிதி மசோதாவை நிராகரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்திய வீட்டோ உத்தரவு முறியடிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் பாதுகாப்பு துறைக்கு ரூ.54.83 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் ராணுவ நிதி மசோதாவில் கையெழுத்திட கடந்த வாரம் அதிபர் டிரம்ப் மறுத்தார். தேச பாதுகாப்புக்கு இந்த மசோதா ஆபத்தை விளைவிப்பதாக கூறி தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாவில் அவர் கையெழுத்திடவில்லை. இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில், வீட்டோ அதிகாரத்துக்கு எதிராக நேற்று மசோதா கொண்டு வரப்பட்டது. இது 322-87 என்ற வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதனால், டிரம்பின் வீட்டோ அதிகார முடிவு தோல்வியடைய செய்யப்பட்டுள்ளது. இதே போல, அனைத்து அமெரிக்கர்களுக்கும் வழங்கப்பட உள்ள கொரோனா நிவாரண நிதி ரூ.44 ஆயிரத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக அதிகரிக்கும் மசோதாவும் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: