தேர்தல் பிரசாரத்துக்கு அழைப்பதை முடிவு செய்வது யார்?: பிரேமலதாவுக்கு அமைச்சர் விளக்கம்

சென்னை: பிரசார கூட்டத்திற்கு யாரை அழைக்கவேண்டும், யாரை அழைக்க வேண்டாம் என முதல்வர், துணை முதல்வர் மட்டுமே முடிவு செய்வார்கள் என பிரேமலதா குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார். சித்தாமூர் கிழக்கு ஒன்றியத்தில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில்  தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு தேர்தல் பணிகள் மேற்கொள்வது குறித்து எடுத்துரைத்தார்.

பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாண்டியராஜன், அதிமுக முதல் பிரசார கூட்டத்திற்கு தேமுதிகவை அழைக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக முதல் பிரசார கூட்டத்திற்கு யாரை அழைக்க வேண்டும், வேண்டாம் என ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே முடிவு செய்வார்கள். மேலும், தமிழகத்தில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக ஒரு அங்கமே தவிர இந்த கூட்டணியில் இங்கு யார் முதல்வர் என்று முருகனோ,வானதி சீனிவாசனோ அறிவிக்க முடியாது என்றார்.

Related Stories: