ஆலந்தூரில் புதிய சிவில் நீதிமன்றம் திறப்பு

ஆலந்தூர்: ஆலந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு உட்பட்ட  பகுதிகளில் உள்ள சிவில்  வழக்கு விசாரணைகள் தாம்பரம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், ஆலந்தூரில் சார்பு நீதிமன்றம் அமைக்க கோரி ஆலந்தூர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர்  கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி ஆலந்தூரில் புதிதாக சார்பு நீதிமன்றம்  அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. சென்னை ஐகோர்ட்டு நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா காணொளி மூலம் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக ஐகோர்ட் நீதிபதி பவானி சுப்புராயன், மாவட்ட நீதிபதி, மாவட்ட கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதேபோல் தாம்பரம் சார்பு நீதிபதி சுல்தான் ஆர்பீன், மாஜிஸ்திரேட்கள் காரல்மார்க்ஸ், மலர்கொடி, ஸ்டெர்லி, சிட்டிபாபு, சுஜாதா, ஆலந்தூர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சார்பு நீதிமன்றத்தின் புதிய நீதிபதி கோதண்டராஜ் முதல் வழக்கு விசாரணையை தொடக்கினார்.

Related Stories: