ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் வரத்து குறைவால் சேனைக்கிழங்கு விலை உயர்வு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் வரத்துக் குறைவால் சேனைக்கிழங்கு விலை உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் பிரசித்தி பெற்ற காந்தி காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு சுற்றுப்புற கிராமங்களான தங்கச்சியம்மாபட்டி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், கரியாம்பட்டி, பொருளூர், காளாஞ்சிபட்டி, லெக்கையன்கோட்டை, விருப்பாட்சி, சிந்தலவாடம்பட்டி, ஸ்ரீராமபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றது.

இந்நிலையில், ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுப்புறங்களில் சேனைக்கிழங்கு இந்தாண்டு சாகுபடி செய்தனர். ஆனால், போதிய மழை இல்லாததால் விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு சேனைக்கிழங்கு வரத்து குறைந்துள்ளது. கடந்த மாதங்களில் ஒரு கிலோ சேனைக்கிழங்கு ரூ.25க்கு விற்கப்பட்டது. ஆனால், தற்போது வரத்து குறைவால் ஒரு கிலோ ரூ.42க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து சேனைக்கிழங்கு கேரளா, ஆந்திரா, கர்நாடாக உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

The post ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் வரத்து குறைவால் சேனைக்கிழங்கு விலை உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: