முகமது அமீரின் கருத்துக்கள் பாகிஸ்தான் அணியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை: இன்சமாம் பேட்டி

கராட்சி: பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் அறிவித்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மனரீதியாக அளித்த டார்ச்சர், பயிற்சியாளர்கள்  வக்கார் யூனுஸ், மிஸ்பா உல் ஹக் ஆகியோரின் செயல்பாடுகளால்தான் மனம் வெறுத்து ஓய்வு அறிவிக்கிறேன். அணியில் உள்ள வீரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று முகமது அமிர் குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக லாகூரில் இன்சமாம் உல் ஹக் அளித்த பேட்டியில் கூறியதாவது: முகமது அமீரின் முடிவு என்ன மாதிரியான தாக்கத்தை அணியின் பந்துவீச்சு மற்றும் வலிமையில் ஏற்படுத்தும் எனத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை  இதுபோன்ற சம்பவங்கள் எங்களின் அணியின் கிரிக்கெட், கிரிக்கெட் உலகில் எங்களின் தோற்றத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது கவலை அளிப்பதாகவே உள்ளது.

அதே நேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அமிரின் கருத்துக்கள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என உணர்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தவிர்த்திருப்பதுதான் சிறந்தது. முகமதுஅமிர் இதுபோன்ற துரதிருஷ்டமான  முடிவு எடுக்கும் முன் தனக்கிருக்கும் வாய்ப்புகளை நன்கு கவனித்திருக்க வேண்டும். அணியில் உள்ள ஒரு சிலர் மீது முகமதுஅமீருக்கு அதிருப்தி இருந்திருந்தால், முதலில் வெளிப்படையாக தலைமைப் பயிற்சியாளரிடம் பேசி இருக்க  வேண்டும். தேவைப்பட்டால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடம் பேசிவிட்டு, என்ன செய்யலாம் என முடிவு செய்திருக்கலாம்.வக்கார் யூனுஸுடன் அமீருக்கு முரண்பாடு இருந்தது. அதை பேசித் தீர்த்திருக்கலாம். ஒருவேளை யாரும்  அமிருக்கு ஒத்துழைத்து செல்லவில்லை என்றால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: