‘பாக்சிங் டே’ டெஸ்டில் ஆட்ட நாயகனுக்கு ‘முல்லா மெடல்’: கிரிக்கெட் ஆஸி. அறிவிப்பு

மெல்போர்ன்: இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளிடையே நடைபெற உள்ள ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெறும் வீரரை கவுரவிக்கும் வகையில் ‘முல்லா மெடல்’ வழங்கப்படும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா  அறிவித்துள்ளது.

பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில், அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் (பகல்/இரவு) அபாரமாக வென்ற ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் ‘பாக்சிங் டே’ போட்டியாக மெல்போர்னில் டிச. 26ம் தேதி  தொடங்குகிறது. கேப்டன் கோஹ்லி இல்லாமல் இந்த சவாலை இந்திய அணி எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில், 2வது டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது பெறும் வீரருக்கு ‘முல்லா மெடல்’ வழங்கப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

1868ம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச சுற்றுப்பயணம் மேற்கொண்ட  ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஜானி முல்லாவை கவுரவிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர் ஆஸி. பழங்குடி இனத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1868ல் ஆஸி. வீரர்கள் அணிந்த பெல்ட்டின் ‘பக்கிள்’ வடிவில் இந்த முல்லா மெடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இனி நடைபெறும் அனைத்து பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருது பெரும் வீரர்களுக்கு இந்த மெடல் வழங்கி  கவுரவிக்க கிரிக்கெட் ஆஸி. முடிவு செய்துள்ளது.

Related Stories: