மெல்போர்ன் டெஸ்டில் ஹனுமா விஹாரிக்கு பதிலாக ஜடேஜா

மெல்போர்ன்: காயம் காரணமாக ஒய்வில் இருக்கும் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 100 சதவீத உடல்தகுதியுடன் இருந்தால், 2வது டெஸ்ட்டில் ஹனுமா விஹாரிக்கு பதிலாக இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடிலெய்டு பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த படுதோல்வியை யாராலும் எளிதில் மறக்க முடியாது. அப்படி கொஞ்சம் மறக்க வேண்டும் என்றால், அடுத்து வரும் டெஸ்ட்களில்  வெற்றியை வசப்படுத்த வேண்டும். அதற்காக இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. விக்கெட் கீப்பர்  விரித்திமான் சாஹா, தொடக்க  ஆட்டக்காரர் பிரித்வி ஷாவுக்கு பதில்  லோகேஷ் ராகுல், ஷூப்மன் கில் ஆகியோர் இடம் பெறப்போவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. அதன் தொடர்ச்சியாக ஆல் ரவுண்டர் ஹனுமா விகாரிக்கு பதில் மற்றொரு ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இடம் பெறக்கூடும் என்ற பேச்சு நிலவுகிறது.  

ஆனால் காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் ஜடேஜா 100 சதவீதம் குணமடைந்தால் மட்டுமே இது சாத்தியம். அதே நேரத்தில்  அடிலெய்டு பகலிரவு  டெஸ்ட்டின் 2வது இன்னிங்சில் அதிக ரன்! (9) எடுத்த வீரர் என்ற பெருமை விஹாரிக்குதான் முதல் இன்னிங்சில் 43, 42 ரன் எடுத்திருந்த புஜாரா, ரஹானே ஆகியோர் 2வது இன்னிங்சில்   டக் அவுட்டாயினர்.  கேப்டன் கோஹ்லி 4 ரன்தான் எடுத்தார். ஆனால், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முதல் டெஸ்ட் பலன் தந்திருப்பதால் ஜடேஜாவை அணியில் சேர்ப்பதின் மூலம் கூடுதல் பலன் கிடைக்கும் என்று அணி நிர்வாகம் நம்புகிறது. கூடவே 5 பந்துவீச்சாளர்களுடன் ஆஸி. அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். அது ஜடேஜாவின் உடல்திறன் மேம்படுவதை பொறுத்தது.

Related Stories: