முதல்வரின் பொங்கல் பரிசு கடுகளவும் உதவாது விவசாயிகளுக்கு 30,000 தர முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: வரும் பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்திற்கு தலா 2500 பண்டிகை பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர், அதிமுக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அறிவித்துள்ளார். மக்கள் வரிப்பணத்தில் அறிவிக்கும் அரசு திட்டங்களை ஆளுங்கட்சியின் உதவித் திட்டமாக சித்தரிப்பது தேர்தல் ஆதாயம் தேடும் முயற்சியில் அதிமுக தொடர்ந்து மரபுகளை நிராகரித்து வருகிறது. சாகுபடி செய்த பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழுகிப் போனதால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஏக்கருக்கு ₹30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொங்கல் பரிசாக 2500 அறிவிக்கப்பட்டிருப்பது எந்தவகையிலும் போதுமானதல்ல. உழவர் தினவிழாவில் கண்ணீர் சிந்தி நிற்கும் விவசாயிகள் கண்ணீர் துடைக்கப்படவில்லை. விவசாய தொழிலாளர், கிராம தொழிலாளர் குடும்பங்களின் கவலைகளை போக்க முதலமைச்சரின் பரிசுத் தொகை கடுகளவும் உதவாது. இதனை கருத்தில் கொண்டு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 5000 ரொக்கப் பண உதவியும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணமும் வழங்க வேண்டும்.

Related Stories: