பிரேசிலில் ‘ஆமை சுனாமி’

பிரேசில்: பிரேசிலில் ஒரே இடத்தில் 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரமாண்ட ஆமைகள், ஒரே நேரத்தில் குஞ்சு பொரிக்கும் அரிய வீடியோ வைரலாகி  வருகிறது. பிரேசிலில் அமேசான் ஆற்றின் துணை நதியான புரூஸ் ஆற்றின்  குறுக்கே ஆமைகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதி அமைந்துள்ளது. கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள இந்த பகுதியில், 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென் அமெரிக்க ஆற்று ஆமைகள் ஒரே நேரத்தில் குஞ்சு பொரிக்கும் அபூர்வ வீடியோ வெளியாகி இருக்கிறது.  ஒரே நாளில்  71 ஆயிரம் ஆமை குஞ்சுகளும், மற்றொரு நாளில் 21 ஆயிரமும் குஞ்சுகளும்  பிறந்துள்ளன. அந்த பகுதிகள் முழுவதும் பெரிய ஆமைகளும், அதன் குஞ்சுகளும் ஊர்ந்து கொண்டிருப்பது, ‘ஆமை சுனாமி’ என அழைக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான  ஆமைக்குஞ்சுளின் வீடியோவை வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் வெளியிட்டுள்ளது.  இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: