வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள வளி மண்டலமேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது ஆங்காங்கே மழைபெய்து வருகிறது. இந்நிலையில், தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் அந்தமான் ஒட்டிய கடல் பகுதியிலும், இலங்கைக்கு  கிழக்கேயும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதையடுத்து, தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யத்தொடங்கியுள்ளது. கடலோர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதுதவிர, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,  புதுக்கோட்டை, மாவட்டங்கள் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மற்ற கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒருசில  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

Related Stories: