வார்னர் இல்லாவிட்டாலும் பேட்டிங் வலுவாகவே உள்ளது: ஆஸி. பயிற்சியாளர் லாங்கர் பேட்டி

அடிலெய்ட்: ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஐஸ்டின் லாங்கர் அளித்துள்ள பேட்டி: பயிற்சி போட்டியின் போது பும்ரா அடித்த பந்து தலையில் பட்டு காயம் அடைந்த கேமரான் கிரீன் மீண்டு வருகிறார். அவர் உடற்தகுதி அடைந்தால் நிச்சயமாக ஆடும் லெவனில் சேர்க்கப்படுவார். தொடக்க வீரர்கள் பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. மார்னஸ் லாபுசாக்னே ஓபனிங்கில் ஆட வாய்ப்பு இல்லை. ஜோ பர்னசை நான் ஆதரிக்கிறேன்.

அவர் ஒரு நல்ல வீரர். மார்னஸ் லாபுசாக்னே 3வது வரிசையிலும், ஸ்மித் 4வது இடத்திலும் ஆடுவார்கள். கேமரான் கிரீன், ஹாரிஸ் காயத்தின் தன்மையை பொருத்து அணி தேர்வு இருக்கும். வார்னர் இல்லாதது பெரும் இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. நாங்கள் நன்றாக ஆடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. பொறுத்திருந்து பாருங்கள், என்றார்.

Related Stories: