ஆஸ்திரேலிய ஓபன் தள்ளிப்போனால் நல்லது...

அக்டோபர் மாதத்திற்குள் 100 சதவீதம்  உடல்தகுதி பெற்றுவிட்டால், புதிய சீசனின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியில்  விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், இன்னும் முழுமையாக உடல்  மேம்படவில்லை.  ஆஸ்திரேலிய ஓபனுக்கு குறைந்த நாட்களே இருக்கின்றன.  இரண்டாவது அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெரிய தடுமாற்றம் இருந்தது. எனினும், கடந்த  6 மாதங்களில்  நிலையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த 2 மாதங்கள் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். சமீபகாலமாக உடற்பயிற்சியோடு கடினமான உடல்  உழைப்பு தேவைப்படும் வேலைகளையும் செய்து வருகிறேன்.  ஆஸி. ஓபன் பிப். 8ம் தேதி தொடங்குமா  என்பதை பார்க்க ஆர்வமாக உள்ளேன். அந்த தொடர் தள்ளிப்போனால் எனக்கு சாதகமாக  இருக்கும். அடுத்த ஆண்டு டென்னிஸ் உலகம் நிச்சயம் என்னிடம் ஏதாவது எதிர்பார்க்கலாம்.

- டென்னிஸ் நட்சத்திரம் பெடரர்.

Related Stories: