திமுக கலைக்குழு தலைமை பேச்சாளர் முகிலன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக கலைக்குழு தலைமை பேச்சாளர் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக கலைக்குழு தலைமை பேச்சாளரும், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் இதயத்தில் தனி இடத்தைப் பிடித்தவருமான முரசொலி முகிலன் தனது 80வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற பேரதிர்ச்சி செய்தி கேட்டு பெருந்துயரத்திற்குள்ளானேன். திருச்செந்தூர் நடைப்பயணத்தின் போது, திமுக பாடல்கள் மூலம் அனைவரையும் உற்சாகப்படுத்திக் கொண்டே, முத்தமிழறிஞர் கலைஞருடன் நடைப்பயணத்தில் உடன் சென்றவர். தனது பிரச்சார வியூகத்தால் முத்தமிழறிஞர் கலைஞரின் பாராட்டைப் பெற்றவர். என் இதயத்தில் தனி இடம் பிடித்தவர். முரசொலி முகிலனை இழந்து வாடும் மனைவிக்கும், மகள்களுக்கும், மகனுக்கும் மற்றும் திமுக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: