வர்த்தூர் பிரகாஷை கடத்துவது குறித்து சிறையில் வைத்து திட்டமிட்டது அம்பலம்: கைதானவர் வாக்குமூலம்

பெங்களூரு: வர்த்தூர் பிரகாஷ் கடத்துவதற்கான திட்டம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து அரங்கேற்றப்பட்டதாக கைதானவர்போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.  பெங்களூரு வர்த்தூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பிரகாஷ். கடந்த மாதம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, கோலாருக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், 4 நாட்கள் சிறை வைக்கப்பட்டிருந்தார். மேலும் மர்ம நபர்கள் அவரை தாக்கி பல லட்சம் பணம் பறித்துள்ளனர். மேலும் பலகோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதற்கு வர்த்தூர் பிரகாஷ் அடிபணிந்ததும், பெங்களூரு ஊரகப்பகுதியில் இறங்கிவிட்டு சென்றனர். இந்த கடத்தல் குறித்து முதலில் வர்த்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் கோலாருக்கு  மாற்றப்பட்டது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த கோலார் போலீசார் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான கவிராஜை  தமிழ்நாட்டில்  கைது செய்தனர். ரோஹித் தப்பி சென்றுவிட்டார். இந்நிலையில் நீதிமன்ற காவலில் உள்ள கவிராஜை  சில நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் வர்த்தூர் பிரகாஷ், கடத்தலுக்கான திட்டம் பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் வைத்து அரங்கேறியதாக தெரிவித்துள்ளார். வர்த்தூர் பிரகாஷ், இதற்கு முன்பு எடியூரப்பா ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, பல கோடி ரூபாய் சம்பாதித்து சொத்து சேர்த்திருப்பதாக சிறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அதை வைத்து வர்த்தூர் பிரகாஷை கடத்தினால், அதிகளவு பணம் பறிக்கலாம் என்று நினைத்து, கூட்டாளிகளை வைத்து, அவரை கடத்தியதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories: