சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்துவதை கண்டித்து பெண் ஊராட்சி மன்ற தலைவர் ராஜினாமா அறிவிப்பு: கிணத்துக்கடவு அருகே பரபரப்பு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே சாதி பெயரை சொல்லி துணைத்தலைவர் இழிவுபடுத்துவதாக கூறி, பெண் ஊராட்சி மன்ற தலைவர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் தேவராயபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுந்தரி. இவர், தாழ்த்தப்பட்ட காட்டு நாயக்கர் என்று சொல்லப்படும் சாம கோடங்கி சமுதாயத்தை சேர்ந்தவர். அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தேவராயபுரம் ஊராட்சியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஊராட்சி தலைவரானார்.

இவருக்கு இந்த ஊராட்சியின் துணைத்தலைவராக உள்ள அ.தி.மு.க.வை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ஒத்துழைப்பு தராமல் சாதி ரீதியாக இழிவுபடுத்தி வருவதாகவும், அவர் சொல்வதை தான் தலைவர் கேட்க வேண்டும் என மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், வேதனையடைந்த ஊராட்சி தலைவர் சுந்தரி, இதுகுறித்து கட்சி நிர்வாகிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று நிருபர்களை சந்தித்த ஊராட்சி தலைவர் சுந்தரி கூறுகையில்: கோவை மாவட்ட கலெக்டரை ேநாில் சந்தித்து துணைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மனு கொடுக்க உள்ளேன். மனு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என கண்ணீர் மல்க கூறினார்.

Related Stories: