ஐசிசி தரவரிசை முதல் இடத்தில் கோஹ்லி, ரோகித்

துபாய்: ஆஸ்திரேலியா-இந்தியா, தென் ஆப்ரிக்கா-இங்கிலாந்து, நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20, ஒருநாள் தொடர்கள் முடிந்துள்ளன. அதனால் டி20 ஐசிசி தரவரிசை பட்டியலில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒருநாள் போட்டி: பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் விராத் கோஹ்லி(870புள்ளிகள்), ரோகித் சர்மா(842) ஆகியோர் தொடர்ந்து முதல் இடங்களில் நீடிக்கின்றனர். பாகிஸ்தானின் பாபர் ஆஸம்(837) 3வது இடத்தில் தொடர்கிறார். ஆஸ்திரேலியாவின் ஆரோன்  பிஞ்ச் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பந்துவீச்சில் முதல் 10 இடங்களில் நியூசிலாந்தின் டிரன்ட் போல்ட் முதல் இடத்திலும்,  ஆப்கானிஸ்தானின் முஜிப் உர் ரகுமான் 2வது இடத்திலும், இந்தியாவின் பும்ரா 3வது இடத்திலும் உள்ளனர். ஆல்ரவுண்டர்கள் பட்டியலில்  ஷகிப் அல்  ஹசன்(வங்கதேசம்), முகமது நபி(ஆப்கானிஸ்தான்), கிறிஸ் வோக்ஸ்(இங்கிலாந்து) ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.  இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டி 20 ேபாட்டி:

 அதன்படி ஐசிசி டி20 தர வரிசைப் பட்டியலில் நேற்று இந்திய பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல்  816 புள்ளிகளுடன் 3வது இடத்தில் தொடர்கிறார். முதல் இடத்தில் தென் ஆப்ரிக்க தொடரில் கலக்கிய இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன்  915புள்ளிகளுடன் இருக்கிறார். பாகிஸ்தான் வீரர்  பாபர் ஆஸம் 871 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், இந்திய வீரர் விராத் கோஹ்லி 697புள்ளிகளுடன் 8வது இடத்திலும் உள்ளனர். அதேபோல் பந்து வீச்சாளர்களுக்கான தர வரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை.  ரஷீத்கான், முஜிப் உர் ரகுமான்(ஆப்கானிஸ்தான்), அடில் ரஷித்(இங்கிலாந்து) ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர். ஆஸி  தொடரில் சிறப்பாக பந்து வீசிய இந்திய வீரர்களில் வாஷிங்டன் சுந்தர் 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பும்ரா 17வது இடத்திலும், சாஹல் 23வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். ஆல்ரவுண்டர்களின் பட்டியலில் முதல் 20 இடங்களிலும்   இந்திய வீரர் ஒருவர் கூட இல்லை. முகமது நபி(ஆப்கானிஸ்தான்), ஷாகிப் அல் ஹசன்(வங்கதேசம்),  கிளென் மாக்ஸ்வெல்(ஆஸ்திரேலியா) ஆகியோர் முதல் 3 இடங்களில் தொடர்கின்றனர்.

Related Stories: