டெல்லி-வாரணாசி இடையே புல்லட் ரயில்: புதிய திட்டம் தயாராகிறது

புதுடெல்லி: அயோத்தி வழியாக டெல்லி வாரணாசி இடையே புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்படுகிறது. இதையொட்டி,  டெல்லி-வாரணாசி இடையே அயோத்தியை இணைக்கும் வரையில் புல்லட் ரயில் வழித்தடம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, டெல்லி-வாரணாசி  இடையே அயோத்தி மட்டுமின்றி மதுரா, பிரக்யாராஜ், வாரணாசி, ஆக்ரா, கான்பூர் ஆகிய நகரங்கள் வழியாகவும் புல்லட் ரயில் வழித்தடம் அமைக்க திட்டமிடப்படுகிறது. 800 கிமீ தூரம் கொண்டு இந்த ரயில் பாதை மூலம் இடாவா, லக்னோ,  ரேபரேலி, பதோகி நகரங்களும் இணைக்கப்படுகின்றன. இதன்படி பல முக்கிய நகரங்கள், நெடுஞ்சாலைகள், ஆற்றுப்பகுதிகள், விவசாய நிலங்களை கடந்து இப்பாதை அமைக்கப்பட உள்ளதால் ஏராளமான சிக்கல்களையும் எதிர்கொள்ள  வேண்டியிருக்கும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: