உலகிலேயே அதிகம் கொள்முதல் செய்யும் நாடு 160 கோடி தடுப்பூசி வாங்கும் இந்தியா: நாட்டின் 60% மக்களுக்கு கிடைக்கும்

புதுடெல்லி: அமெரிக்காவை சேர்ந்த, ‘டியூக் பல்கலைக் கழக உலக சுகாதார கண்டுபிடிப்பு மையம்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திடம் இருந்து 50 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி, அமெரிக்காவின் நோவாவாக்சிடம் இருந்து 100 கோடி பிபைசர் தடுப்பூசி, , ரஷ்யாவிடம் இருந்து 10 கோடி ஸ்புட்னிக்-V தடுப்பூசிகளை இந்தியா வாங்குகிறது. கடந்த நவம்பர் 30ம் தேதி நிலவரப்படி இந்த ஒப்பந்தங்கள் உறுதியாகி உள்ளது. இதன் மூலம், 60 சதவீத இந்திய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு, எதிர்ப்புசக்தி சமூகம் உருவாக்கப்பட உள்ளது,’ என கூறப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய யூனியன் 158 கோடி தடுப்பூசிகளை வாங்குகிறது.

Related Stories: