சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபாடு செய்வதற்கு வயது வரம்பை நிர்ணயம் செய்துள்ளது கேரள அரசு..!

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபாடு செய்வதற்கு வயது வரம்பை கேரள அரசு நிர்ணயம் செய்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 15-ம் தேதி கோவில்நடை திறக்கப்பட்டது. நடப்பாண்டு கொரோனா தொற்று காரணமாக சபரிமலைக்கு செல்ல ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தரிசனத்திற்கு செல்லும்போது 24 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நெகட்டிவ் சான்றிதழ் காலாவதியாகி இருந்தால் சபரிமலைக்கு அருகேயுள்ள நிலக்கல்லில் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது. இதற்கு ரூ.600 முதல் ரூ.700 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரை மணிநேரத்தில் கொரோனா சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அது மட்டுமின்றி பக்தர்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 3 ஆயிரம் பேரும், மற்ற நாட்களில் 2000 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்தநிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபாடு செய்வதற்கு வயது வரம்பை கேரள அரசு நிர்ணயம் செய்துள்ளது. சபரிமலை ஐயப்ப பக்தர்களின் சேவைகளுக்காக கேரள காவல்துறையுடன் இணைந்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு புதிய வலைதளத்தை தொடங்கியுள்ளது. அதில் சபரிமலைக்கு வரக் கூடிய பெண்களுக்கான வயதுவரம்பு குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதில் 50 வயதுக்கு குறைவான பெண்கள் மற்றும் 65 வயதுக்கு அதிகமான பெண்கள் சபரிமலையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக 10வயதுக்கு குறைவான சிறுமிகள் மற்றும் 65வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஏற்கனவே கேரள அரசு அறிவித்திருந்தது. இந்தநிலையில் சபரிமலையில் அனுமதிக்கப்படும் பெண்களுக்கான வயதுவரம்பு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: