டெல்லி மருத்துவமனையில் சாதனை கொரோனா தொற்று நோயாளிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை

புதுடெல்லி: கோவிட்-19 தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட 31 வயது நபருக்கு விபத்தில் டெல்லியில் மூளை சாவு அடைந்த ஒருவரின் நுரையீரல் தானமாக பெறப்பட்டு பொருத்தப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியை சேர்ந்த நோயாளி ஒருவர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டார். ஆனால், அதன்பின்னர் அவருக்கு நுழையீரல் அலர்ஜி ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டு டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த 49 வயது பெண்ணின் நுரையீரல் தானமாக பெறப்பட்டது.

இதனை டெல்லி  சாகேத்தில் உள்ள மாக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக போலீசாரின் துணையுடன், ஜெய்பூர் தனியார் மருத்துவயிலிருந்து ஏர்போர்ட்டுக்கும், அதேபோன்று டெல்லி ஐஜிஐ ஏர்போர்ட் முதல் மாக்ஸ் மருத்துவமனை வரையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டபசுமை வழிதடம் அமைக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி ஜெய்பூரிலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட நுரையீரல், விமான நிலையத்தில் இதற்காக தயாராக வைக்கப்பட்டு இருந்த ஆம்புலன்சில் சுமார் 18.3 கிமீ தூரத்தை 18 நிமிடங்களில் கடந்து மாக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. அங்கு 31வயது நபருக்கு அந்த நுரையீரல் அறுவை சிகிச்சை செய்து பொருத்தப்பட்டது. தற்போது, அந்த நோயாளி நல்ல நிலையில் உள்ளார்.

மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ள 15 டாக்டர்கள் அடங்கிய குழு 10 மணி நேரம் இரவு முழுவதும் அறுவை சிகிச்சை செய்தது. இந்த குழுவிற்கு மருத்துவமனையின் மூத்த இதய மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சை நிபுணர் இணை இயக்குநர் ராகுல் சந்தோலா தலைமை தாங்கினார். கோவிட் தொற்று பாதித்த ஒருவருக்கு இதுபோன்ற உறுப்பு மாறு அறுவை சிகிச்சை செய்வது வடமாநிலத்தில் இதுவே முதல்முறையாகும் என மாக்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ள 15 டாக்டர்கள் அடங்கிய குழு 10 மணி நேரம் இரவு முழுவதும் அறுவை சிகிச்சை செய்தது.

Related Stories: