டெல்லி: மாதக்கணக்கில் நீடித்த குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த ஆண்டு நவம்பர் தொடங்கி ஷாஹின்பாக் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு உலகின் கவனத்தை ஈர்த்தவர் 82 வயது பில்கிஸ் மூதாட்டி. பிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் ஹீரோ ஆயுஷ்மான் குர்ரானா ஆகியோருடன் உலகின் சக்தி வாய்ந்த 100 பிரமுகர்கள் என அமெரிக்காவின் பிரபல டைம் இதழ் பட்டியலிலும் இடம் பிடித்தவர்.