வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண திட்டம்: அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: நிவர் புயல் மற்றும் கன மழை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு  ரூபாய் 4 லட்சம் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், ரூபாய் 6 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், ஆக மொத்தம் ரூபாய் 10 லட்சம்  நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.  மேலும், இப்புயலின்போது 61 மாடுகளும், 5 எருதுகளும், 65 கன்றுகளும், 114 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு ரூபாய் 30,000, எருது ஒன்றுக்கு ரூபாய் 25,000, கன்று ஒன்றுக்கு ரூபாய் 16,000, ஆடு ஒன்றுக்கு ரூபாய் 3,000  வழங்கப்படும்.

வேளச்சேரி, முடிச்சூர், வரதராஜபுரம் மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி, குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை கருத்தில் கொண்டு, இப்பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண உரிய திட்டங்களை வகுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதாரத்தை முறையாக கணக்கீடு செய்து, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், இது தவிர பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையும் பெற்றுத் தரப்படும்.

Related Stories: