வீட்டு ஊழியருக்கு கொரோனா: பரூக் அப்துல்லா, உமர் ‘தனிமை’

ஸ்ரீநகர்: வீட்டு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் சுய தனிமைப்படுத்திக் கொண்டனர். தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா ஆகியோர் தங்களது வீடுகளில் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் வீட்டில் பணியாற்றி வந்த ஊழியர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இருவரும் இன்னும் ஒரு வாரம் தொடர்ந்து தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், பரூக் அப்துல்லாவும், உமர் அப்துல்லாவும் தங்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்திக் கொண்ட போது அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதுதொடர்பாக உமர் அப்துல்லா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘கடந்த வாரம் வீட்டு ஊழியர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு பாசிடிவ் ரிசல்ட் வந்தது. அதனால், நாங்கள் எங்களை தனிமைப்படுத்திக் கொண்டோம். எங்களது தனிமைப்படுத்தப்பட்ட காலம் இன்னும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கும். அடுத்த திங்கட்கிழமை மற்றொரு பரிசோதனையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: