கலாம் பிறந்த நாள் ஓவிய போட்டி: உசிலம்பட்டி மாணவர்கள் சாதனை

உசிலம்பட்டி: கலாம் பிறந்த நாள் ஓவிய போட்டியில் உசிலம்பட்டி மாணவர்கள் சாதனை படைத்தனர். முன்னாள் ஜனாதிபதி கலாம் பிறந்தநாளை முன்னிட்டு சீர்காழி ஜாக்கி கிரியேஷன்ஸ் உசிலம்பட்டியில் ‘மாபெரும் சலாம் கலாம்’ என்ற உலக சாதனைக்கான ஓவிய போட்டியை கடந்த அக்டோபர் 15ம் தேதி நடத்தியது. கலாம் பிறந்தநாளை முன்னிட்டு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இப்போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து 1483 பேர் கலந்து கொண்டனர். டிரம்ப் வேர்ல்டு ரெக்கார்டு மாபெரும் ஓவியத்தை அங்கீகரித்து உலக சாதனையாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஓவிய போட்டியில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு உலக சாதனையின் பங்கேற்பு விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவை ஜாக்கி கிரியேஷன்ஸ் ஞானசெல்வன் ஆன்லைன் மூலம் துவக்கி வைத்தார். இந்த ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Related Stories: