தமிழக சட்டமன்ற தேர்தல் பணிக்கு அரசு ஊழியர், ஆசிரியர் விவரம் சேகரிப்பு: மாவட்ட நிர்வாகங்கள் தீவிரம்

சேலம்: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு நாளன்றும் வாக்கு எண்ணிக்கையின்போதும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அதிகளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காக இப்போதே அவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியும் தொடங்கியுள்ளது.

மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர்கள், அனைத்து துறைகளில் இருந்தும் அந்த விவரங்களை பெற்று வருகின்றனர். கல்வித்துறையை பொறுத்தவரை, அனைத்து மாவட்ட சிஇஓக்கள் மூலமாக விண்ணப்பங்கள் தலைமையாசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறையில் உள்ள அரசு பணியாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இந்த மாத இறுதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Related Stories: