இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு ஜோ பைடன் தலைமையில் மேலும் வலுப்பெறும்: மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் உறுதி

டெல்லி: கேட்வே ஹவுஸ் ஒருங்கிணைத்த இணையக் கருத்தரங்கில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  ஜெய்சங்கர் பேசியதாவது, ஜோ பைடன் துணை அதிபராக இருந்தபோதே இந்தியாவுடன் நல்ல நட்புறவில் இருந்தவர். அமெரிக்காவின் அதிபராக ஒபாமா ஆட்சியின்போது நான் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இருந்தேன். அப்போது அமெரிக்க செனட்டின் வெளியுறவுத் தொடர்புக் குழுவின் ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதியாக, தலைவராக இருந்த ஜோ பைடன் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தவர்.

இந்தியா - அமெரிக்க உறவானது ஒரு புதிய மாற்றத்தை எதிர்கொண்ட மிக முக்கியமான தருணத்தில் ஜோ பைடன் நம் நாட்டுடன் நல்லுறவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இந்தியாவுக்கோ, இந்திய - அமெரிக்க நல்லுறவைப் பேணுவதிலோ ஜோ பைடன் எதிரியானவர் கிடையாது மற்றும் அமெரிக்க அரசியல் சற்று வித்தியாசமானது.

அமெரிக்காவில் நாம் ஆட்சியில் இருப்பவர்களுடன் மட்டும் உறவைப் வளர்த்தால் போதாது. மேலும் அந்நாட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும். இருப்பினும் ஜோ பைடன் தலைமையில் இந்தியாவின் நட்புறவில் எந்த சிக்கலும் இருக்காது என்று  மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

Related Stories: