அதிமுக எம்எல்ஏ மகனுக்கு குவாரி ஏலம் விவகாரம் சட்ட அறிவு இல்லாதவர் அமைச்சர் சி.வி.சண்முகம்: ஆர்.எஸ்.பாரதி பதிலடி

சென்னை:  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கை: ‘கடுகளவு கூட’ சட்ட அறிவு இல்லாத சி.வி.சண்முகம்  எங்கள் தலைவரைப் பார்த்து ‘நுனிப்புல் மேய்பவர்’ என்று கூற என்ன அருகதை இருக்கிறது. எங்கள் தலைவரிடம் உள்ள நேர்மை கொஞ்சம் கூட  அமைச்சருக்கு இல்லை. அதனால் தான் அவருக்கு ‘பொது ஊழியர்’ என்பதற்கும் அர்த்தம் தெரியவில்லை. ஓர் அமைச்சர், தன் கட்சி எம்எம்ஏவிற்கே  டெண்டர் கொடுக்கலாமா, அரசு குவாரியைக் கொடுக்கலாமா என்ற அடிப்படையைத் தெரிந்து கொள்ளத் தனக்கும் சட்ட அறிவு  கொஞ்சம் இருக்கிறது  என்று நினைப்பாரேயானால் அந்த  அறிவைக் கூட சி.வி.சண்முகம் பயன்படுத்திட முன்வரவில்லை. அந்த அளவிற்கு ஊழல் என்ற கனமழையில்  இன்றைக்கு நனைந்து கொண்டிருக்கிறார்.

‘பொது ஊழியர்கள்’ குறித்து ஊழல் தடுப்புச் சட்டமும், இந்தியத் தண்டனைச் சட்டமும் என்ன சொல்கிறது? அவர்கள் என்ன செய்யக்கூடாது என்று  கூறுகிறது என்பதைக் தெரிந்து கொள்ளவில்லை.  அரசாங்கத்தில் டெண்டர் எடுப்பது என்ன தவறு என்று ஒரு அமைச்சர் பேசும் அதிசயம் தமிழக அமைச்சரவையில் தான் நடக்கும். அமைச்சரிடம்  ஒப்படைக்கப்படும் குவாரிகள் அரசின் சொத்து. அதை தன் இஷ்டத்திற்கு அமைச்சர் தன் கட்சி எம்எல்ஏ மகனுக்கு கொடுக்க எந்தச் சட்டமும்  அனுமதிக்கவில்லை.  இந்த சட்டங்களை  எப்போதாவது புரட்டிப் பார்த்திருந்தால் சி.வி.சண்முகம் இப்படி அபத்தமான வாதத்தை வைத்திருக்க  மாட்டார்.

Related Stories: