உடற்தகுதியை நிரூபிக்க பயிற்சி... இஷாந்த் சர்மா கடும் முயற்சி

பெங்களூரு: காயம் காரணமாக கடந்த தொடர்களிலிருந்து வெளியேறிய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, தனது உடல்தகுதியை நிரூபிக்க தற்போது என்சிஏவில் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ரஞ்சி கோப்பை தொடரின்போது காயம் பட்ட இஷாந்த் சர்மா தொடர்ந்து நியூசிலாந்து தொடர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் முழுமையாக பங்கேற்க முடியாமல் அவதிப்பட்டு இடையிலேயே திரும்பினார். இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரிலும் காயம் காரணமாக அவரது பெயர் இடம்பெறாமல் உள்ளது. இதனால் தனது பிட்னசை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இஷாந்த் சர்மாவிற்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸி.யில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் பகலிரவு போட்டியில் மட்டும் பங்கேற்கும் கேப்டன் விராட் கோலி தனது குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பவுள்ளார்.

இதனால் அணியின் பந்துவீச்சை பலப்படுத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.  இந்நிலையில் என்சிஏ தலைவர் ராகுல் டிராவிட்டின் தலைமையின்கீழ் இஷாந்த்சர்மா தனது உடற்தகுதியை நிரூபிக்க தொடர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அன்டர்-19 பயிற்சியாளர் பாரஸ் மாம்ப்ரேவிடம் அவர் தொடர்ந்து பிட்னஸ் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, மாம்ப்ரேவுடன் பிட்னஸ் பயிற்சிகளை மேற்கொள்வதன்மூலம், டெஸ்ட் போட்டிகள் துவங்குவதற்குள் இஷாந்த் உடற் தகுதியில் முழு தகுதி பெறுவார் என்று ராகுல் டிராவிட் பிசிசிஐக்கு உறுதி அளித்துள்ளதாகவும் ஆஸ்திரேலிய தொடரில் அவர் பங்கு அதிகளவில் இருக்கும் என்று அவர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories: