தங்கம் கடத்தல் வழக்கில் அரசியல்வாதிகளுக்கு அமலாக்கத்துறை குறி: நீதிமன்றத்தில் சிவசங்கர் தகவல்

திருவனந்தபுரம்: கேரள  தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக எழுந்த புகாரையடுத்து, மூத்த ஐஏஎஸ்  அதிகாரி சிவசங்கரிடம் மத்திய  அமலாக்கத்துறை, சுங்க இலாகா, என்ஐஏ ஆகிய அமைப்புகள் சுமார் 100 மணிநேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தின. இதையடுத்து சிவசங்கர் கைது  செய்யப்பட்டார். தற்போது 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எர்ணாகுளம் காக்கநாடு சிறையில் உள்ளார். இதற்கிடையே  சொப்னாவின் லாக்கரில் கிடைத்த ₹1 கோடி பணம் லைப் மிஷன் திட்டத்தில் சிவசங்கருக்கு கொடுக்கப்பட்ட கமிஷன்  தொகை  என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சிவசங்கரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் சிவசங்கர் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். அதில், ‘இந்த வழக்கில் அரசியல்  தலைவர்களை தொடர்புபடுத்த மத்திய அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். தங்க கடத்தல், லைப் மிஷன் போன்ற வழக்குகளில்  அரசியல்வாதிகள் பெயரை கூறுமாறு என்னை வற்புறுத்தினர். நான் அதற்கு உடன்படாததால் என்னை கைது ெசய்தனர். இந்த வழக்கில் எனக்கு எந்த  தொடர்பும் கிடையாது. தங்கம் வந்த பார்சலை விடுவிக்க நான் எந்த அதிகாரியையும் அழைக்கவில்லை’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: