முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை உறவினர்களுக்கு டெண்டர்களை வழங்கி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: வானூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சக்ரபாணி மகனுக்கு வழங்கப்பட்ட கல்குவாரி உரிமைத்தை ரத்து செய்ய வேண்டும் ன திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். கல்குவாரி உரிமம் வழங்கிய அமைச்சர் சி.வி.சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் கூறினார். வானூர் கல்குவாரி கோர விபத்தில் ஒருவர் இறந்ததன் மூலம் குவாரி டெண்டர் முறைகேடு அம்பலமாகியுள்ளது என குற்றம் சாட்டினார். காவல் நிலையத்தில் திருவக்கரை சக்ரபாணி மகன் என்று மட்டுமே குறிப்பிட்டு எம்.எல்.ஏ மகன் என்பதை மறைத்துள்ளனர் என கூறினார். அதிமுக எம.எல்.ஏ.வின மிரட்டல் காரணமாக எப்.ஐ.ஆரில் திருவக்கரை பிரபு என்று பதிவு செய்து போலீசார் மறைத்துள்ளனர் என கூறினார். கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சக்ரபாணி மகனுக்கு குவாரி குத்தகை அளித்திருப்பது அம்பலமாகியுள்ளது எனவும் கூறினார்.

முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை விதிமுறைகளுக்கு எதிராக, பொது ஊழியர்களின் உறவினர்களுக்கு குத்தகைகளையும், டெண்டர்களையும் வழங்கும் முறைகேடு தொடர்கிறது என கூறினார். தனது சம்பந்திக்கும், அவரது உறவினருக்கும் நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை ரூ4,000 கோடிக்கு முதல்வர் வழங்கினார் எனவும் சூட்டிக்காட்டினார். உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவரது சகோதரர், உறவினர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ஓப்பந்தங்கள் வழங்கியுள்ளார் என கூறினார். சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுக மகனுக்கு கல்குவாரி உரிமம் கொடுத்துள்ளார் என தெரிவித்தார்.

பொது ஊழியர்கள், தங்களுக்கோ, உறவினர்களுக்கோ அரசு பணி டெண்டர் வழங்கக்கூடாது என்பது விதி என கூறினார். அமைச்சர் சி.வி.சண்முகம் எம்எல்ஏ சக்ரபாணி மீது தாமாக முன்வந்து லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார். முதல்வர் பழனிசாமி ஆட்சியில் டெண்டர் முறைகேடுகள் தொடர்ந்து வருவதாக குறிப்பிட்டார். அரசின் டெண்டர்கள், காண்டிராக்டுகள், குத்தகைகள் எல்லாம் அ.தி.மு.க. அமைச்சர்களும், முதலமைச்சரும் இப்படி போட்டி போட்டுக் கொண்டு கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும், தங்கள் உறவினர்களுக்கும் அளித்து வருகிறார்கள் என கூறினார். சட்ட நெறிகளைப் பின்பற்றி, உரிய முறையில் விசாரணை நடத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: