சோபியா ஓபன் டென்னிஸ் 19 வயது வீரர் சின்னர் பட்டம் வென்று சாதனை

சோபியா: பல்கேரியாவில் நடந்த சோபியா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 19 வயது இளம் வீரர் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.பரபரப்பான இறுதிப் போட்டியில் கனடா வீரர் வாசெக் பாஸ்பிசிலுடன் (30 வயது) மோதிய சின்னர் 6-4, 3-6, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் போராடி வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 2 மணி, 14 நிமிடத்துக்கு நீடித்தது. இந்த வெற்றியின் மூலம் கடந்த 12 ஆண்டுகளில் ஏடிபி பட்டம் வென்ற மிக இளம் வயது வீரர் என்ற பெருமையை சின்னர் பெற்றார்.

மேலும், மிக இளம் வயதில் ஏடிபி பட்டம் வென்ற இத்தாலி வீரர் சாதனையும் அவர் வசமானது.ஏடிபி ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையிலும் சின்னர் முதல் முறையாக 37வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

Related Stories: