பீகார் தேர்தல் முடிவு: தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகள் எழுப்பிய எதிர் கட்சிகள்

பீகார்: பீகார் தேர்தலில் பாரதிய ஜனதா- ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சியை பிடித்திட்டுந்தாலும் தேர்தல் முடிவுகள் வெளியானா விதம் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. ஆளும் பாஜக கூட்டணி முறைகேடு செய்தே வெற்றி பெற்றதாக குற்றம் சாட்டியுள்ள எதிர் கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளையும் முன்வைத்துள்ளனர்.

நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்று அதிகாலை 3 மணிவரை நீடித்ததற்க்கு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையே காரணமென்று தேர்தல் ஆணையம் கூறினாலும் எதிர்கட்சிகள் முன்னிலை வகித்த இடங்களில் வேண்டுமென்றே வாக்கு எண்ணிக்கை தாமதபடுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

காலையில் தொடங்கி நண்பகல் வரை நிமிடங்கள் இடைவெளியில் மாறிக்கொண்டிருந்த முன்னிலை நிலவரம் பிற்பகலில் 5மணிநேரம் வரை ஒரே நிலையில் இருந்தது எப்படி என்பதும் எதிர்கட்சி களின் கேள்வியாக உள்ளது.

 

வாக்கு எண்ணிக்கையை தாமதப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கை மூலம் 2 ஆயிரம் வாக்குகளுக்கு குறைவான வித்தியாசத்தில் எதிர்கட்சிகள் முன்னிலையில் இருந்த தொகுதிகளில் முடிவுகள் மாற்றப்பட்டதகாவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல்வேறு வாக்கு எண்ணிக்கை மைய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நிதிஷ்குமார் வீட்டில் இருந்து தொலைப்பேசி அழைப்புகள் சென்றதாகவும் அதன்பிறகே தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்டதாகவும் குற்றம் சாட்டும் எதிர்கட்சிகள் இதன் பின்னனி குறித்து விசாரிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

50 க்கும் அதிகமான தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடியும் முன்பே பீகார் மக்களுக்கு நன்றி தெரிவித்தது ஏன்? என்பதும் எதிர்கட்சிகளின் கேள்வியாக உள்ளது.

 

35 தொகுதிகளில் முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில் எதிர்கட்சிகள் தோல்வியை ஏற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியது எப்படி? என்றும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எதிர்கட்சி வேட்பாளர்கள் குறைந்த வெற்றிபெற்ற தொகுதிகளில் வெற்றிச்சான்றிதழ் வழங்க தாமதம் ஏற்பட்டது ஏன்? என புகார் கூறியுள்ள காங்கிரஸ் இதற்கான காரணத்தை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

 

எதிர்கட்சி வேட்ப்பாளர்களுக்கான தபால் வாக்குகள் திட்டமிட்டு கடைசிநேரத்தில் நிராகரிக்கப்பட்டது ஏன்? என்பது குறைந்த வித்தியாசத்தில் தோற்ற எதிர்கட்சிகளின் கேள்வியாக உள்ளது.

 

இரவு 8 மணி நிலவரப்படியே 119 தொகுதிகளில் ஆர்.ஜே.டி.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதாக தகவல் வெளியான நிலையில் அந்த கூட்டணிக்கு 110 இடங்கள் மட்டுமே கிடைத்திருப்பதால் சிலதொகுதிகளில் முடிவுகள் மாற்றி அறிவிக்க பட்டத்தா என்றும் வினா எழுந்துள்ளது.

ஒவ்வொரு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போதும் குளறுபடி புகார் எழுவது வாடிக்கை என்றாலும் பிகாரில் வாக்கு எண்ணிக்கையில் புகார் எழுந்தா உடன் வழக்கத்திற்கு மாறாக அடுத்தடுத்து தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பை ஏற்படுத்தியது ஏன் என்பதும் விடை தெரியாத கேள்வியாக உள்ளது.

Related Stories: