சிங்கம்புணரி ஜிஹெச்சில் பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி தாலுகா மருத்துவமனையில் மூடி கிடக்கும் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிங்கம்புணரி தாலுகா அரசு மருத்துவமனைக்கு தினமும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதயநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற பல்வேறு ஊர்களில் இருந்து வெளிநோயாளிகள் வருகின்றனர். நோயாளிகள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மருத்துவமனை வளாகத்தில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது.

கடந்த சில மாதங்களாக இந்த சுகாதார வளாகம் பயன்பாடின்றி பூட்டப்பட்டுள்ளது. இதனால் சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க திறந்தவெளியை பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவமனை நிர்வாகம் பூட்டப்பட்ட சுகாதார வளாகத்தை உடனடியாக திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: