கொரோனா பரவலால் 96% பேருக்கு மன உளைச்சல்: மக்களுக்கு மனநல ஆலோசனை வழங்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: கொரோனா வைரஸ் பரவலால் நாட்டில் 96% பேருக்கு கடும் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கோவிட்-19 தொற்று இந்தியாவிலும் பரவி அதன் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு சில இடங்களில் நோய் தொற்று குறைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,310 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 82,67,623-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,23,097 பேர் உயிரிழந்த நிலையில் 76,03,121 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

மேலும் தற்போது 5,41,405 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தெரிவித்துள்ள சுகாதார அமைச்சகம் கொரோனா பரவல் காரணமாக நாட்டு மக்களிடம் உளவியல் பாதிப்புகள் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. வாழ்க்கை முறை கட்டுப்பாடுகள், நிச்சயமற்ற எதிர்காலம், வேலையிழப்பு உள்பட பல்வேறு காரணங்களால் 30% பேர் மனதளவில் சோர்வடைந்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மன உளைச்சலால் அவதிப்படுபவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க மருத்துவமனைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Related Stories: