ஆதரவாளர்கள் இடையே அமைச்சர் திடீர் மனக் குமுறல்.: ஆர்.பி.உதயக்குமாரின் குமுறலால் கட்சியினரிடையே சலசலப்பு

மதுரை: செல்வாக்கை பயன்படுத்தி ஒருவருக்கு வேலை வாய்ப்போ அல்லது கட்சியில் ஒரு பதவியோ பெற்று தரும் போது அது கிடைக்காதவர்கள் தான் இதோ ஒரு எதிரியை போல பார்ப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியை அடுத்த தேவர்குறிச்சி என்ற கிராமத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஒரு ஞானப்பழத்தை விநாயகரும், முருகரும் எப்படி போட்டிபோட்டுக் கொண்டு வாங்கினார்களோ அது போன்ற நிலை தான் தற்போது உள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தனது குமுறலை வெளிப்படுத்தினர். இதனால் தமக்கு தர்மசங்கடம் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் இந்த பேச்சு ஆதரவாளர்கள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதிமுக-வில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் பேச்சு அவ்வப்போது புது புது சலசலப்பை ஏற்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.

Related Stories: