கொரோனா பாதிப்பு: ரெம்டெசிவிர், பெவிபிரவிர்நோயாளிக்கு தரப்படுகிறதா? மத்திய அரசு 4 வாரத்தில் பதிலளிக்க கெடு

புதுடெல்லி: கொரோனா தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர், பெவிபிரவிர் மருந்துகள் ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்தப்படுகிறதா? என்பதற்கு, மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளான ரெம்டெசிவிர், பெவிபிரவிரின் செயல்திறன் குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆலோசித்து வருகின்றனர். இந்நிலையில், வக்கீல் எம்.எல். சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த மனுவில், ஒப்புதல் இல்லாமல் ரெம்டெசிவிர், பெவிபர்விர் மருந்துகள் பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வக்கீல் சர்மா, ``உலக சுகாதார அமைப்பு கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், கொரோனா சிகிச்சையில் எந்தவொரு  தடுப்பு மருந்துக்கும் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது,’’ என தெரிவித்தார். இதனைக் கேட்ட அமர்வு, `ரெம்டெசிவிர், பெவிபிரவிர் மருந்துகள் ஒப்புதல் இல்லாமல்  பயன்படுத்தப்படுகிறதா? என்பதற்கு,  மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க  வேண்டும்,’ என உத்தரவிட்டது.

Related Stories: