புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனை வரும் 3ம் தேதி திறப்பு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

திருவனந்தபுரம் : புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனை வரும் 3ம் தேதி திறக்க உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் சமூக இடைவெளியை பின்பற்றி சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் மூன்று மூடப்பட்ட நிலையில் பத்மநாபபுரம் அரண்மனையும் மூடப்பட்டது. தற்போது பத்மநாபபுரம் அரண்மனை திறக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>