நெமிலி அருகே சாலையோரம் தடுப்பு சுவர் இல்லாத ஆபத்தான கிணறு

நெமிலி: நெமிலி பேரூராட்சி காவேரிபுரம் பகுதிக்கு செல்லும் சாலையோரம் பேரூராட்சிக்கு சொந்தமான பழமைவாய்ந்த கிணறு உள்ளது. தடுப்பு சுவரின்றி காணப்படும் இந்த கிணறு, காவேரிபுரம் கிராமம், நெமிலி பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு குடிநீர் வழங்கும் கிணறாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தண்ணீர் வற்றியதால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. இவ்வழியாக செல்லும் வாகனங்கள் கிணற்றில் விழும் ஆபத்தான நிலை உள்ளது. இதனால் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

எனவே கிணறுக்கு தடுப்பு சுவர் கட்டித்தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது, கிணற்றின் ஓரம் செல்லும் கிராம சாலை புதுப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. ஆனால் இந்த கிணற்றின் வழியாக வாகனங்களில் செல்ல பொதுமக்கள் ெபரும் அச்சப்படுகின்றனர். எனவே, பயன்படுத்தாமல் பாழடைந்து காணப்படும் கிணற்றை உடனே மூடவேண்டும், அல்லது தடுப்பு சுவர் அமைத்து உயிரிழப்பை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: