ஐதராபாத்தை வீழ்த்தி பஞ்சாப் த்ரில் வெற்றி

துபாய்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீசியது. அந்த அணியில் நதீமுக்கு பதிலாக கலீல் இடம் பெற்றார். பஞ்சாப் அணியில் மயாங்க், நீஷமுக்கு பதிலாக ஜார்டன், மன்தீப் சேர்க்கப்பட்டனர். சன்ரைசர்ஸ் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளித்து ரன் எடுக்க முடியாமல் திணறிய பஞ்சாப் அணியால், 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. கேப்டன் ராகுல் 27, மன்தீப் 17, கிறிஸ் கேல் 20, மேக்ஸ்வெல் 12 ரன் எடுத்தனர். பூரன் 32 ரன் (28 பந்து, 2 பவுண்டரி), பிஷ்னோய் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ரஷித் கான் 4 ஓவரில் 14 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். சந்தீப், ஹோல்டர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். சிறப்பாகப் பந்துவீசிய நடராஜன் 4 ஓவரில் 23 ரன் மட்டுமே கொடுத்து பஞ்சாப் ஸ்கோரை கட்டுப்படுத்த உதவினார். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 127 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. வார்னர், பேர்ஸ்டோ இருவரும் துரத்தலை தொடங்கினர். அணியின் ஸ்கோர் 56 ஆக இருந்தபோது வார்னர் 20 பந்துகளில் (2 சிக்ஸ், 3 பவுண்டரிகள்) 35 ரன் எடுத்திருந்தபோது ரவி பிஸ்னாய் பந்தில் கேப்டன் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். தொடர்ந்து மனீஷ்பான்டே களம் இறங்கினார்.

இந்நிலையில் பேர்ஸ்டோ 19 ரன் (20 பந்துகள், 4 பவுண்டரிகள்) எடுத்திருந்தபோது  அஸ்வின் பந்தில் அவுட்டானார். இதையடுத்து விக்கெட்கள் மளமள சரிந்தன. 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த ஐதராபாத் அணியால் 114 ரன் மட்டும் எடுக்க முடிந்தது. இதனால் பஞ்சாய் அணி 12 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வென்றது. ரஷீத்கான், சந்திப் சர்மா, அகமது மற்றும் நடராஜன் (அவுட்இல்லை) ரன் எதுவும் எடுக்கவில்லை. கிரிஸ் ஜோர்டனுக்கு மேன் ஆப் திமேட்ச் வழங்கப்பட்டது.

Related Stories: