ஐடிபிபி 59வது ஆண்டு நிறுவன தினம்: சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தோ திபெத் படை தயார்: மத்திய அமைச்சர் சூசக பேச்சு

நொய்டா:இந்தோ-திபெத்  எல்லை பாதுகாப்புப் படை (ஐடிபிபி), லடாக் பகுதியில் உள்ள கரகோரம் கணவாய் முதல் அருணாசலப் பிரதேசம் ஜசிப் லா  என்ற பகுதி வரையிலான 3,488 கி.மீ இந்திய-சீன எல்லையை பாதுகாக்கிறது. இப்படை 1962ம் ஆண்டு, அக்டோபர் 24ல் மத்திய சேமக் காவல் படைச்  சட்டம் மூலமாக உருவாக்கப்பட்டது. இதன், 59வது ஆண்டு நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், மத்திய உள்துறை இணை அமைச்சர்  கிஷன் ரெட்டி கலந்து கொண்டு பேசியதாவது: எதிரி நாடு எப்போது, எங்கு தலையை உயர்த்தும் என்பதை உற்று நோக்கி, பதிலடி கொடுக்க நாம்  தயார்நிலையில் இருக்க வேண்டும்.

உலகின் சக்தி வாய்ந்த ராணுவத்தை கொண்டிருப்பதாக நினைக்கும் நாட்டிற்கு எதிராக, இந்தியா தயார்நிலையில் இருப்பதில், ஐடிபிபி முக்கிய தூணாக  விளங்குகிறது. நம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க அண்டை நாடுகளும், எதிரி நாடுகளும் தொடர்ந்து முயற்சிக்கின்றன. ஐடிபிபி. இந்த  தடைகளை முறியடித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது. ஐடிபிபி.யை வலிமையானதாகவும், நவீனமயமாக்கவும் நடப்பாண்டில்  ரூ. 7,223 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: