வன்னியருக்கு தனி இடஒதுக்கீடு வழங்காவிட்டால் தொடர் சாலை மறியலை விட கடுமையான போராட்டம் நடக்கும்: ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதை செய்ய அரசு  தயங்கினால் பாட்டாளி மக்களை திரட்டி, தொடர் சாலைமறியலை விட கடுமையான போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு எவ்வளவு பங்கு கிடைத்துள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்கும்படி பலமுறை கோரியும் அதை கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் ஏற்கவில்லை.

மக்கள்தொகை அடிப்படையில் வழங்கப்படும்  பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும் 19% இடஒதுக்கீடு தவிர மீதமுள்ள 81 விழுக்காடு இடஒதுக்கீட்டில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.  மருத்துவப் படிப்பு உள்ளிட்ட கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் 15 விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தால், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதை செய்ய அரசு தயங்கினால் பாட்டாளி மக்களை திரட்டி, தொடர் சாலைமறியலை விட கடுமையான போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்பதை தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: