இடைத்தேர்தல் முடிவு வெளியானதும் முதல்வர் எடியூரப்பா மாற்றப்படுவார்: பாஜ எம்.எல்.ஏ. பேச்சால் பரபரப்பு

பெங்களூரு: ‘இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு எந்த நேரத்திலும் முதல்வர் எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து மாற்றப்படுவார்’ என்று  பா.ஜ. எம்.எல்.ஏ. பசவனகவுடாபாட்டீல் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில முதல்வராக உள்ள எடியூரப்பாவை மாற்ற வேண்டும்  என்று பாஜ கட்சியினர் கட்சி மேலிடத்தில் கோரிக்கை வைத்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா  நீண்ட நாட்கள் முதல்வர் பதவியில் நீடிக்க மாட்டார் விரைவில் மாற்றப்படுவார் என்று பாஜ எம்எல்ஏ பசவனகவுடா பாட்டீல் எத்னால் கூறியுள்ளார்.

விஜயபுரா நகரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் பேசுகையில், ‘‘முதல்வர் எடியூரப்பா அதிக நாட்கள் முதல்வர் பதவியில் நீடிக்கமாட்டார்.  அவருக்கு இதற்கு மேலும் இடம் கொடுக்க முடியாது என்று மேலிடம் கருதுகிறது.

வடகர்நாடக மாவட்டத்தை சேர்ந்த மக்கள் 100 பாஜ எம்.எல்.ஏக்களை வெற்றிபெற செய்து விதானசவுதாவுக்கு அனுப்பிவைக்கின்றனர். ஆனால் மற்ற  பகுதிகளில் 15 தொகுதிகளில் வெற்றிபெற்று வரும் எம்.எல்.ஏக்களில் ஒருவர் முதல்வர் பதவிக்கு வந்து விடுகிறார். இதனால் வரும் நாட்களில்  வடகர்நாடக மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முதல்வர் பதவிக்கு வருவது நிச்சயம். இதனுடன் வடகர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு முதல்வர் பதவி  வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதியளித்துள்ளார்’’ என்றார். இதற்கு முன்னர் எடியூரப்பாவுக்கு எத்னால் நெருக்கமாக இருந்தார்.  அவருக்கு அமைச்சர் பதவி வழங்காமல் சிசி பாட்டீலுக்கு வழங்கியதாலும், விஜயபுரா தொகுதியின் வளர்ச்சி நிதியை திரும்ப பெற்றதாலும் அதிருப்தி  அடைந்துள்ளார். தற்போது அவரது பேச்சு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Related Stories: