சென்னை, புறநகர் பகுதிகளில் நடைபெறும் குடியிருப்பு திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்: துணை முதல்வர் ஓபிஎஸ் உத்தரவு

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெறும் குடியிருப்பு திட்டங்களை விரைந்து முடிக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று சென்னை நந்தனத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களான 26,903 அலகுகள் கொண்ட 40 சுயநிதி திட்டங்கள், 3 வணிக வளாகம் மற்றும் குடியிருப்புகளுக்கான திட்டங்கள், 38 மனை மேம்பாட்டு திட்டங்கள், 22 வணிக வளாக திட்டங்கள், 10 தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகளுக்கான திட்டங்கள், 2 குடிசை மாற்று குடியிருப்புகளுக்கான திட்டங்கள் மற்றும் 5 வைப்பு நிதி திட்டங்கள் ஆகிய அனைத்து திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து விரைவில் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆய்வு கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: