நடப்பாண்டு தீபாவளியின் போது 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம்

புதுடெல்லி: நாடு முழுவதும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதனை வெடிப்பது மற்றும் உற்பத்தி போன்றவற்றில் ஒரு சில மாற்றங்களை செய்து கடந்த 2018ம் ஆண்டு சில நிபந்தனைகளுடன் கூடிய தீர்ப்பை வழங்கியது. அதன்படி, தமிழகத்தில் காலை ஒரு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு அது நடைமுறையில் இருந்து வருகிறது.

பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியுள்ள நேரத்தை அதிகரிக்கக் கோரி பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனையாளர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு இந்த மாதம் 27ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்காக வரவிருந்த நிலையில் திடீரென அடுத்த மாதம் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து பட்டியலிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில் வழக்கு தேதி மாற்றியமைக்கப் பட்டுள்ளதால் இந்த ஆண்டும் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி என்ற உத்தரவு தொடரும் என தெரிகிறது.

Related Stories: