7 மாதங்களுக்கு பின் சபரிமலையில் மீண்டும் படிபூஜை

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக கடந்த 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படிபூஜை மீண்டும் துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் தீபாராதனைக்கு பிறகு 18 படிகளும் கழுவி சுத்தப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பட்டுத்துணி விரித்து, அலங்காரத்துடன் படிபூஜைகளுக்கான ஏற்பாடுகள் நடந்தன. சரணகோஷங்கள் முழங்க, வாத்திய இசையுடன் பக்திபூர்வமாக, தந்திரி கண்டரர் ராஜீவரரு முன்னிலையில், ஒவ்வொரு படியிலும் குடிகொண்டுள்ள மலை தெய்வங்களுக்கு பூஜைகள் நடந்தன. வரும் 21ம் தேதிவரை படிபூஜை நடக்கிறது. தரிசனத்துக்கு 250 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், 200க்கும் குறைவான பக்தர்களே வருகை தருகின்றனர்.

Related Stories: